அஸ்ட்ராலஜி டெம்பிள் டாட் காம்   360–>365[365.25]366 நாட்கள்?!..  astrologytemple.com  ஜோதிடத்தில், ஜாதகத்தில் எதிர்காலப் பலன்களை நாம் அறிந்து கொள்வதற்கு விம்சோத்தரி தசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையைப் பயன்படுத்துகிறோம். தசாபுக்தி என்றும், திசாபுக்தி என்றும், தசைபுக்தி என்றும், திசைபுக்தி என்றும் அழைக்கின்றனர்.

தசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில், சூரியன்.. சந்திரன்.. செவ்வாய்.. ராகு.. குரு.. சனி.. புதன்.. கேது.. சுக்கிரன் ஆகிய கோள்கள் இவ்வரிசைக் கிரமப் படியே வட்டசுழற்சி முறையில் தங்களின் தசாபுக்தி அந்தரப் பலாபலன்களை ஜாதகருக்குத் தருகின்றன.

தசா ஆண்டுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் ஆண்டுகள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

சூரியதசை………..6ஆண்டுகள்
சந்திரதசை……….10ஆண்டுகள்
செவ்வாய்தசை…7ஆண்டுகள்
ராகுதசை…………18ஆண்டுகள்
குருதசை…………16ஆண்டுகள்
சனிதசை…………19ஆண்டுகள்
புதன்தசை………..17ஆண்டுகள்
கேதுதசை…………7ஆண்டுகள்
சுக்ரன்தசை……20ஆண்டுகள்

என,மொத்தம் 120 ஆண்டுகள் தசாஆண்டுகளாக கணக்கிட்டிருக்கின்றனர்.

ராசிமண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் ‘9’ கோள்களுக்கும் சரிசமவிகிதமாக பங்கிடப்பட்டு மும்மூன்று நட்சத்திரங்கள் [9ⅹ3=27] என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மும்மூன்று நட்சத்திரங்களை அடுத்தடுத்த மூன்று நட்சத்திரங்கள் ஒரு கிரகத்திற்கு என ஒதுக்காமல், அடுத்தடுத்த ஒவ்வொரு நட்சத்திரமாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒதுக்கப் பட்டிருக்கின்றன.
அந்த வகையில்,
அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் கேது தசைக்கும்,
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் சுக்ர தசைக்கும்,
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் சூரிய தசைக்கும்,
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் சந்திர தசைக்கும்,
மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் செவ்வாய் தசைக்கும்,
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராகு தசைக்கும்,
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குரு தசைக்கும்,
பூசம், அனுஷம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சனி தசைக்கும்,
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் புதன் தசைக்கும்,
என ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கேற்ப மீதம்/ பாக்கி/ இருப்பு இருக்கின்ற தசா, புக்தி, அந்தரங்களை நம் முன்னோர்கள் [தற்போதைய ஆங்கிலக் காலண்டர் வருகைக்கு முன்], தமிழ் ஆண்டு, மாதம், நாட்களை அடிப்படையாகக் கொண்டே கணக்கிட்டு வந்திருக்கின்றனர்.

ஆண்டின் கணக்கைப் பொறுத்தவரை, 1 ஆண்டுக்கு 360 நாட்கள் அடங்கிய 12 மாதங்கள் என்றும், 30 நாட்கள் கொண்ட்து 1 மாதம் என்றும் கணக்கிட்டுப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனால்தான், மார்கழிமாதம் என்பது 30 நாட்கள் மட்டும் கொண்ட 1 மாதமாகப் பின்பற்றி வந்ததால் – பழங்காலத் தமிழர்களின் பாரம்பரியத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் திருப்பாவை, திருவெம்பாவை முதலான நூல்களில் மார்கழி மாதம் 30 நாட்களுக்கு மட்டும் பாடல்கள் பாடப்பெற்றிருக்கின்றன.

காலப்போக்கில், அறிவியல் வளர்ச்சியால் 1 ஆண்டு என்பது 360 நாட்கள் மட்டும் கிடையாது, 365¼ நாட்கள் என்று கணக்கிடப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இதன் காரணமாக 360 நாட்களாக இருந்த நமது பண்டைய ஆண்டும் 365¼ நாட்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆங்கிலக் காலண்டரில் ஒரு ஆண்டின் 365¼ நாட்களை, 12 மாதங்களுக்கும் நிரந்தரமாக -ஜனவரி31, பிப்ரவரி28 [லீப் ஆண்டில் 29], மார்ச்31, ஏப்ரல்30, மே31, ஜூன்30, ஜூலை31, ஆகஸ்டு31, செப்டம்பர்30, அக்டோபர்31, நவம்பர்30, டிசம்பர்31 நாட்கள் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நடைமுறையில் உள்ள மற்ற பல ஆண்டுக் கணக்கீடுகளின் மாதங்களுக்கு நிரந்தர நாட்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை..

அந்தவகையில், தற்போதைய காலகட்டத்தில் தமிழர் ஆண்டின் மார்கழி மாதத்திற்கு சில ஆண்டுகளில் 29 நாட்கள் மட்டும் வருகிறது; சில தமிழ் மாதங்களுக்கு 29, 30,31 மற்றும் 32 நாட்கள்கூட வருகிறது.

ஆங்கிலக் காலண்டரின்படி, ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் நிரந்தரமாக நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால்தான், ஆங்கிலக் காலண்டர் உலகந்தழுவிய நிலையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழர் ஆண்டு உட்பட உலகளவில் ஆங்காங்கே நடைமுறையில் உள்ள மற்ற இன, மொழி, மதம், சாதி, ராஜ்ஜியங்கள், தனிமனித பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுகளில் பலவற்றிற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் நிரந்தரமாக நாட்கள் ஒதுக்கீடு செய்யாததால் பல குழப்பங்கள் ஏற்பட்டு-தேதி சார்ந்து பாரம்பரிய.. பண்பாட்டு நிகழ்வுகளைக் கடைப்பிடிப்பதில்கூட சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

ஜோதிடம், ஜாதகத்தில், தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்த ஆரம்ப.. தொடக்கக் காலத்திற்கும்-தற்போது [ 07.09.2017] நாம் அதை பயன்படுத்தும் காலத்திற்கும் உள்ள மாபெரும் வித்தியாசத்தை.. வேறுபாட்டை.. இயலாமையை கணக்கீட்டுத் தவறை.. நிரூபித்துக் காட்டி அந்தத் தவறை சரிசெய்து.. சீர்திருத்தம் செய்து மிகச்சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டை தெரியப்படுத்தி.. தெளிவுபடுத்தி.. பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து ஒவ்வொருவரையும் பயன்பெறச் செய்வதே எங்களின் நோக்கமாகும்.

ஆம்.. தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தில், 60 விநாழிகைகள், 1நாழிகை எனவும் ; 60 நாழிகைகள் 1 நாள் எனவும் ; 30 நாட்கள் 1 மாதம் எனவும்: 12 மாதங்கள் [360 நாட்கள்] 1 வருடம் எனவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

பழங்கால தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணையில் உள்ள நாழிகை ; விநாழிகைகளை _ தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள மணி: நிமிடம்: வினாடிகளாக மாற்றி ஒப்புமைப்படுத்தி புதிதாக, மற்றும் முதன்முதலாக எங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தர அட்டவணை 120 ஆண்டுகளுக்கு மாதிரி தங்களின் பார்வைக்கு   http://astrologytemple.com/assets/dasaa.pdf   பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழங்கால தசாபுக்தி அந்தரம் கணக்கீட்டு அட்டவணையின் படியே, நம் முன்னோர்கள், ஆங்காங்கே அவ்வப்பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் ஆண்டு, மாதம், நாட்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தியே, ஒரு ஜாதகர் பிறந்த தேதி, ஜாதகரீதியிலான தசா இருப்பு முதல் – நடப்பு தசாபுக்தி அந்தரங்களை கணக்கிட்டு பலன்கள் அறிந்து வந்திருக்கின்றனர்.

ஆனால், ஆங்கிலக் காலண்டரின் வருகைக்குப் பின்னால் – உலகந்தழுவிய நிலையில் ஆங்கிலக் காலண்டர் பின்பற்ற ஆரம்பித்த நாட்கள் முதல், ஒருஜாதகர் பிறந்ததேதி, ஜாதக தசா இருப்பு முதல் – நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்வதில் மாபெரும் தவறு.. அறியாமை.. குறை.. பிழை.. இயலாமை நடைபெற்று வருகிறது. கணிதவியல் பூர்வமாக நிரூப்பிக்கக்கூடிய தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டின் மூலம் ; தவறாகவே பலாபலன்கள் கணிப்பதும் நிகழ்ந்துவருகிறது. இந்த தவறான கணக்கு மற்றும் கணிப்பு மூலம் ஜாதகம் சார்ந்து எதிர்காலத் திட்டமிடலே 50% தவறாகவே அமைந்து விடுகிறது.

ஜோதிடம்.. ஜாதகம் ரீதியாக எதிர்காலத் திட்டமிடலில் தசாபுக்தி அந்தரங்கள் சார்ந்து 50% பலன்களும், அவ்வப்போதைய கோட்சார கிரக நிலைகள் சார்ந்து 50% பலன்களும் என 100% பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இதில்,
ⅰ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகபலன்கள் சிறப்பாக இருந்து – கோட்சாரப்பலன்களும் சிறப்பாக இருந்தால் 100% நற்பலன்களை அடையலாம்.
ⅱ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் சிறப்பாக இருந்து – கோட்சாரப் பலன்கள் திருப்தியில்லாமல் இருந்தால் 50% நற்பலன்களை மட்டுமே அடையலாம்.
ⅲ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் திருப்தியில்லாமல் – கோட்சாரப் பலன்கள் சிறப்பாகயிருந்தால் 50% நற்பலன்களை மட்டுமே அடையமுடியும்.
ⅳ] தசாபுக்தி அந்தரம் சார்ந்த கிரகப்பலன்கள் திருப்தியில்லாமல் – கோட்சாரப் பலன்களும் திருப்தியில்லாமல் இருந்தால் 100% திருப்தியில்லாத பலன்களே நடைமுறைக்கு வரும். கூடுதல் கவனத்துடன்/விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஆக, தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டால்.. தவறான எதிர்காலத் திட்டமிடலால் 50% திருப்தியில்லாத பலாபலன்களே நடைமுறைக்கு வரும். தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டில்தான், நம்மையறியாமலே தவறு செய்து வருகிறோம் என்றால்; கோட்சாரம் சார்ந்து எதிர்காலத் திட்டமிடலிலும் சிலர் தெரிந்தே தவறு செய்து திருப்தியில்லாத பலன்களையே அனுபவிக்கின்றனர்.

ஆம்.. பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் விஞ்ஞானிகளாலும் அறிவார்ந்த நிபுணர்களாலும் கணிக்கப்பட்ட பஞ்சாங்கம், கோட்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் திருக்கணிதப் பஞ்சாங்க ரீதியிலான கிரகப்பெயர்ச்சி தேதிக்கும்- ‘பழையன கழிதல்; புதியன புகுதல்’ என்ற உண்மைக்கு மாறாக.. எதிராக.. பழமை.. பழமை என்று பழமைக்கு வக்காலத்து வாங்கி வாதாடிவரும் வாக்கியப் பஞ்சாங்கங்களின் கிரகப்பெயர்ச்சி தேதிக்கும்  மாபெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

இந்த வேறுபாட்டால், எந்த பஞ்சாங்கத்தின் கிரகப்பெயர்ச்சி தேதியை சரியானது என்று நம்பி, எதிர்காலத் திட்டமிடலை மேற்கொள்வது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டு பலரும் 50% கோட்சாரப் பலன்களிலும் திருப்தியில்லாமல் ஜோதிடத்தையே குறைகூறும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

கிரகப்பெயர்ச்சி சார்ந்து விழா எடுத்து ஹோமம்.. யாகம்.. வேள்வி நடத்தும் சில ஜோதிடர்களும்.. புரோகிதர்களும்.. போலி ஆன்மிகவாதிகளும் இரண்டு பஞ்சாங்கங்களின் கிரகப் பெயர்ச்சி சார்ந்தும் ஜாதகர்களை பரிகாரம் செய்யச்செய்து வசூல்வேட்டை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை என்பது, திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது.

எனவே, நாங்கள்  astrologytemple.com  மேற்கொண்டுள்ள ‘மிகச்சரியான.. துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தர கணக்கீட்டு அட்டவணை’ சீர்திருத்தம் என்பது, நடைமுறையில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் – மிகச்சரியான/ துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாக அமையும்.

தற்போது பெரும்பாலான ஜோதிடர்களாலும், கம்ப்யூட்டர் ஜாதகங்களிலும் ஆங்கிலக் காலண்டரைப் பயன்படுத்தியே நடப்பு தசாபுக்தி அந்தரங்கள் கணக்கிடப்படுகிறது.

சூரிய தசை மொத்தம் 6 வருடம்
சூரிய புக்தி 3 மாதம் 18 நாட்கள்
சூரிய புக்தியில் அந்தரங்கள்
……………………மாதம்… நாள்… நாழிகை
சூரியன்……………..0………5………….24
சந்திரன்…………….0………9……………0
செவ்வாய்…………0………6…………..18
ராகு……………………0…….16…………..12
குரு……………………0……..14…………..24
சனி……………………0………17……………6
புதன்………………….0……….15………….18
கேது…………………..0………..6………….18
சுக்ரன்………………..0……….18……………0
……………………………3……..108……….120
…………………………………….3.18………..2

மாதிரி கணக்கீடு:
× × × தவறு/wrong × × × × × ×
……………………..31.8.2011
சூரிய தசை வருடம் 6 X 365.25நாட்கள்
……………………..31.8.2017
எனவரும். இது தவறான கணக்கீடாகும். இதில், 3 மாதம் என்பதை 30, 31 நாட்கள் கொண்ட மாதங்களாகக் கணக்கிடாமல் பொத்தாம் பொதுவாக கூட்டல் கணக்கு போல மாதத்தை கூட்டியுள்ளதால் தவறான கணக்கீடாக அமைகிறது என்பதை தாங்களும் அறிவீர்கள்

பொதுவான தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில் 1 மாதம் என்பது நிரந்தரமாக 30 நாட்கள் மட்டும்தான். ஆனால், ஆங்கிலக் காலண்டரில் 28,29,30, மற்றும் 31 நாட்கள் உள்ள மாதங்களும் வருகின்றன. இத்தகைய மாதங்களின் நாட்களைக் கணக்கிட்டால்தான், மிகச்சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் காலக்கட்டத்தைக் கணக்கிடமுடியும்.

இத்தகைய அணுகுமுறையின்படி,சூரியதசை 6 X 360 = 2160 நாட்களைத்தான் 31.8.2011 லிருந்து கூட்டவேண்டும்.

இது, எப்படியெனில், 31.8.2011 லிருந்து 2160 நாட்களைக் கூட்டும் போது,
வருடம்…நாள்…மணி:நிமி
2011…….122……..2:30
2012…….366……..0:0
2013…….365……..0:0
2014…….365……..0:0
2015…….365……..0:0
2016…….366……..0:0
2017…….210…….21:30
………….2160
நாட்கள் என மொத்தம் 2160 ஆவது நாள் 30.7.2017 வருகிறது. இதுதான் மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாகும்.

…………………………மிகச்சரி/accurate
………… 31.8.2011 9:30 pm
sun dasaa years 6 X360 days
………….30.7.2017 9:30 pm

தவறான [6X365.25=2191.50 நாட்கள்] தசாபுக்தி அந்தரக்கனக்கீட்டு தேதிக்கும் முன்பாகவே – மிகச்சரியான [6X360=2160 நாட்கள்] நடப்பு தசாபுக்தி அந்தர தேதி முடிந்துவிடும்.

ஒரு ஆண்டுக்கு 360 நாட்களின் படி நடந்து முடிந்த தசாபுக்தி அந்தரங்களுக்கு – ஒரு ஆண்டுக்கு 365.25 நாட்களின் படி தற்போது தான் நடைபெறுகிறது என்று தவறாகக் கணக்கிட்டு பரிகாரம்,வழிபாடு,எதிர்காலத் திட்டமிடல்,முயற்சிகள் மேற்கொண்டால் எப்படி நினைத்தது நடக்கும்?, எண்ணியது நிறைவேறும்?,காரிய வெற்றி உண்டாகும்?. கவனம் தேவை !

தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில் மிகக் குறைந்த ஆண்டு அளவான சூரியதசைக்கு – மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் – தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் சரியாக 30/31 நாட்கள் வித்தியாசம் வருகிறது.

பழங்கால தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டின்படியும், நமது மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையின்படியும் – பிறந்ததேதியிலிருந்து தசாபுக்தி அந்தரம் கணக்கிடும்போது 1 ஆண்டுக்கு 360 நாட்கள் என்பதால் மிகச் சரியான தேதி, நேரத்தில் கணக்கீடு அமையும். தவறான தசாபுக்தி அந்தர கணக்கீட்டு தேதிக்கும் முன்பாகவே, மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தர தேதி முடிந்துவிடும்.

மிகச் சரியான தசாபுக்தி அந்தரத்தின்படி முன்னரே நடைபெறும் யோக தசா, புக்தி அந்தரங்கள்- பின்னர்தான் நடைமுறைக்கு வரும் என்று தவறான தசாபுக்தி அந்தரம் நம்மை ஏமாற்றிவிடும். அதுபோலவே கெடுதசாபுக்தி அந்தரங்களிலும் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்யாமல் கஷ்ட, நஷ்டங்களை உண்டுபண்ணிவிடும் கவனம்தேவை.

1 ஆண்டுக்கு 360 நாட்களுக்கும்
1 ஆண்டுக்கு 365.25 நாட்களுக்கும்
உள்ள வித்தியாசத்தை..வேறுபாட்டை கணக்கிடும்போது,
1 ஆண்டுக்கு 5.25 நாட்கள்
2 ஆண்டுக்கு 10.50 நாட்கள்
4 ஆண்டுக்கு 21 நாட்கள்
8 ஆண்டுக்கு 42 நாட்கள்
16 ஆண்டுக்கு 84 நாட்கள்
24 ஆண்டுக்கு 126 நாட்கள்
32 ஆண்டுக்கு 168 நாட்கள்
50 ஆண்டுக்கு 262.50 நாட்கள்
64 ஆண்டுக்கு 336 நாட்கள்
72 ஆண்டுக்கு 378 நாட்கள்
என வித்தியாசப்படும்.

தவறான நடப்பு தசா புக்தி அந்தர தேதிக்கும் – மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர தேதிக்கும் மேற்கண்டவாறு நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வித்தியாசங்கள் ஏற்படும்.

இப்படியாக ஆண்டுக்கு 5¼ நாட்கள் என்ற அளவில் மிகப்பெரிய வித்தியாசத்தோடு.. தவறான நடப்பு தசாபுக்தி அந்தரத்தைக் கணக்கிட்டு, எதிர்காலத் திட்டமிடலை மேற்கொண்டு செயல்பட்டு வந்தால்.. எப்படி நினைத்தது நடக்கும்? எண்ணியது நிறைவேறும்? காரிய வெற்றி உண்டாகும்?

அந்தரத்தின் அவசியம்.. இன்றியமையாமை..

ஒரு கிரகத்தின் தசையில்.. ஒரு கிரகத்தின் புக்தியின் நடப்பு தேதிகள் மாறுபடுவதுபோல்; ஒரு கிரகத்தின் புத்தியில்.. ஒரு கிரகத்தின் அந்தரம் நடைமுறைக்கு வரும் தேதிகளிலும் – கால அளவிலும் மாறுபாடுகள் உண்டாகும்.

தசாபுக்தி அந்தர கணக்கீட்டு அட்டவணையின்படி ஜாதககிரக பலன்களை அறியும் போது, ஒவ்வொரு கிரகத்தின் அந்தர கால அளவு நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் – அந்தக் கிரகம் ஜாதகத்தில் அமைந்திருப்பதற்கேற்ப நற்பலன்களையோ/கெடுபலன்களையோத் தரும். ‘அந்தரம்’ தானே என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். நீதிமன்ற நடவடிக்கைகளில் சாட்சியாக இருப்பவரே பிறழ்சாட்சியாக மாறக் கூடிய கட்டாய அசாதாரண சூழ்நிலை ஏற்படும். இதை சாட்சி ‘அந்தர்பல்டி’ அடித்துவிட்டார் என்பார்கள். அதேபோல் யோகமான கிரகங்களின் தசா, புக்தி நடைமுறையில் இருந்தாலும், கெடுபலன் தரக்கூடிய கிரகங்களின் அந்தரம் நடைமுறைக்கு வந்தால் வாழ்க்கைப் பாதையில் நஷ்டங்களும், கஷ்டங்களும் அரங்கேறும்.

அதேபோல், கெடுபலன் தரக்கூடிய கிரகங்களின் தசா, புக்திகள் நடைமுறையில் இருந்தாலும் யோக பலன் தரக்கூடிய கிரகங்களின் அந்தரம் நடைமுறைக்கு வந்தால் வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத.. நினைத்துக்கூடப் பார்க்காத அனைத்துவகை முன்னேற்றங்களும் அனுபவத்திற்கு வரும்.

ஆக, ஒரு கிரகத்தின் அந்தரத்தின் நடப்பு கால அளவை மிகச் சரியாக………………………….
துல்லியமாக கணக்கிடுவதற்கு………?…?….?…..

ஆங்கில காலண்டரின்படிதான்.. இப்படி தவறு ஏற்படுகிறதென்று, தமிழ் ஆண்டின் மாதக் கணக்கில்.. நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கிட்டாலும் அதில் மார்கழி முதலான சில மாதங்கள் 29, நாட்களாகவும், தமிழ் வருடத்தின் மற்ற சில மாதங்கள் 29, 30, 31 மற்றும் 32 நாட்களாகவும் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறாக நாட்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கும். எனவே, தமிழ் ஆண்டு மாதக் கணக்கின்படி ‘நடப்பு தசாபுக்தி அந்தரங்களை கணக்கீடு செய்து கொள்கிறேன்’ என்று மேலும் தவறான கணக்கையே எதிர்காலத் திட்டமிடலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

எதிர்காலத்தில் தமிழர் ஆண்டு கணக்கீட்டில் மாதங்களுக்கு நிரந்தர நாட்கள் ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு வரும் போது தமிழ் நாட்காட்டியின் படியும் மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை தயாரிக்க முடியும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டில்.. பயன்பாட்டில் மிகப் பெரிய தவறு இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவது மட்டுமல்ல எங்களது நோக்கம். அத்தகைய தவறிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள -பழமைக்கும்↔புதுமைக்கும் பாலம் கட்டுவது போல், பழங்கால தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு
அட்டவணையை<—>தற்கால ஆங்கிலக் காலண்டரின்படி.. காலக் கணிய அறிவியல் தொழில் நுட்பத்தின்படி, மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையைத் தயார் செய்து ஒவ்வொருவருக்கும் வழங்குவதே எங்களின்   அஸ்ட்ராலஜி டெம்பிள் டாட் காம்-ன்  சீர்திருத்த நோக்கமாகும்.

தவறான நடப்பு தசாபுக்தி அந்தரங்களைக் கணக்கிடுவது போல், தாங்களே மிகச்சரியான/ துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடு அட்டவணை தயார் செய்து விடலாம் என்று எளிதாக.. சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரம் கணக்கிடுவதற்கு அளவு கடந்த பொறுமையும், நிதானமும், 28,29,30, 31 மற்றும் 32 நாட்கள்,              360–>365 [365.25] 366 நாட்கள்?! கொண்ட 1 ஆண்டு என்ற வகையில் மிகப் பெரிய ஒப்புமைப் படுத்தும்  ஞாபகசக்தியும், கணிதத் திறமையும் இருக்க வேண்டும். கணக்கீட்டின் இடையில் 1 நாள் எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டாலும், அது தவறான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீடாகவே அமைந்துவிடும். இதையெல்லாம்விட 1 ஜாதகத்துக்கு மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை தயார் செய்யவே நாட்கணக்கில் கால விரையமாகும் என்பதை அறிவீர்கள்.

இதனாலேயே, நாங்கள் astrologytemple.com மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையை-காலக்கணிய அறிவியல் தொழில் நுட்பத்தில் வடிவமைத்து மிக மிக எளிதாக அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டு வந்திருக்கிறோம்.

ஜாதகரின் பிறந்த தேதி[ நாள், மாதம், ஆண்டு],நேரம் [ மணி: நிமிடம்: வினாடி] மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் அதிகபட்சம் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை  பல மொழிகளில் கிடைக்கும்16 A4 பக்கங்கள்.

இந்த, ‘மிகச் சரியான/துல்லியமான நடப்பு தசா புக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை’ சார்ந்து தவறைக் கண்டுபிடித்ததற்காகவோ , கணினி தொழில் நுட்பத்தில் அட்டவணையாக வடிவமைக்கட்பட்டதற்காகவோ நாங்கள் எந்தவொரு பணமதிப்பும் தங்களிடமிருந்து கோரவில்லை., எதிர்பார்க்கவுமில்லை. இணையதள பராமரிப்பு மற்றும் சேவைக் கட்டணமாக மிகச் சிறிய சன்மானத்தை மட்டும் எதிர்பார்க்கிறோம்.

மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தரம் 120  ஆண்டுகளுக்கான  அட்டவணையை கணினி அச்சில் பிரதி எடுப்பதற்கும், அதைத் தாங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கும் அஞ்சல் செலவுக்குமாகத்தான் தங்களிடமிருந்து மிகக் குறைந்த சேவைக் கட்டணம் பெறுகிறோம்.

ஒரு முறை எங்களிடமிருந்து பெறும் அல்லது தாங்களாகவே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் மிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணையை தாங்கள் இணையவெளி முதலான தங்களுக்கு உகந்த, தாங்கள் நம்பும் வகையில் பல ஆண்டுகளுக்குப் பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பதற்கு பிறந்த தேதி, நேரம், இடம் தேவைப்படுவதை போல்,
மிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை தயார் செய்ய, பிறந்த தேதி, நேரம், ஜாதக இருப்பு தசையின் பெயர் மற்றும் அதில் இருப்பு இருக்கின்ற வருடம், மாதம், நாட்கள், மணி: நிமிடம்: வினாடி [ நாழிகை: விநாழிகை] ஆகிய குறிப்புகளை பதிவு செய்தால்,மிகச் சரியான துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டு அட்டவணை கிடைத்துவிடும்.மாதிரி அட்டவணையை   http://astrologytemple.com/assets/dasaa.pdf  -ல்  பர்க்கலாம்.

மிகச் சரியான, துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தரக்கணக்கீட்டு அட்டவணை                                      120  ஆண்டுகளுக்குப்  பயன்படுத்தி ஜோதிடம், ஜாதகரீதியாக தங்களின் எதிர்காலத்திட்டமிடலை சிறப்பாக/திருப்தியளிக்கும் வகையில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

Get FREE Download.. For all the Horoscopes which are Created Using Computer Horoscope, Thirukanitham, Vaakyam and Other Panchangams in Practice, 360–>365[365.25]366 Days ?!.. Accurrate Current Dasaa Bukthi Antharam Chart For 120 Years From Birth Date, Time and Dasaa Balance at astrologytemple.com Multi Lingual. 16 A4 pages. No Service Charge.. Local Print Cost with Download@M.R.P. INRs.50/-Only.. Not For Sale. ct:+91 9942684099 use & share.. Thanks..
கம்ப்யூட்டர் ஜாதகம், திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான
360–>365[365.25]366?.. நாட்கள்?!.. நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை astrologytemple.com-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல மொழிகளில் கிடைக்கும்.16 A4 பக்கங்கள். இலவச சேவை..உள்ளூர் அச்சு பிரதி விலை பதிவிறக்க கட்டணத்துடன்@ அதிகபட்ச விலை ரூ 50/-மட்டும். விற்பனைக்கு அல்ல.
Created by:N.Ravi Rangaswamee.,M.A.,PG.D.E.A.,     ct:+91  9942684099                                                               Astrological Compatibility Research Training & Prediction professional                                                            Software Developed by:SathishKumar.K    ct:+91 9841038255     use & share..  Thanks..

Related posts

Leave a Comment