அஸ்ட்ராலஜி டெம்பிள்.டாட் காம்   360–>365[365.25]366 நாட்கள்?!..  astrologytemple.com  ஜோதிடத்தில், ஜாதகத்தில் எதிர்காலப் பலன்களை நாம் அறிந்து கொள்வதற்கு விம்சோத்தரி தசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையைப் பயன்படுத்துகிறோம். தசாபுக்தி என்றும், திசாபுக்தி என்றும், தசைபுக்தி என்றும், திசைபுக்தி என்றும் அழைக்கின்றனர். தசா, புக்தி, அந்தரக் கணக்கீட்டு அட்டவணையில், சூரியன்.. சந்திரன்.. செவ்வாய்.. ராகு.. குரு.. சனி.. புதன்.. கேது.. சுக்கிரன் ஆகிய கோள்கள் இவ்வரிசைக் கிரமப் படியே வட்டசுழற்சி முறையில் தங்களின் தசாபுக்தி அந்தரப் பலாபலன்களை ஜாதகருக்குத் தருகின்றன. தசா ஆண்டுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் ஆண்டுகள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. சூரியதசை………..6ஆண்டுகள்சந்திரதசை……….10ஆண்டுகள்செவ்வாய்தசை…7ஆண்டுகள்ராகுதசை…………18ஆண்டுகள்குருதசை…………16ஆண்டுகள்சனிதசை…………19ஆண்டுகள்புதன்தசை………..17ஆண்டுகள்கேதுதசை…………7ஆண்டுகள்சுக்ரன்தசை……20ஆண்டுகள் என,மொத்தம் 120 ஆண்டுகள் தசாஆண்டுகளாக கணக்கிட்டிருக்கின்றனர். ராசிமண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் ‘9’ கோள்களுக்கும் சரிசமவிகிதமாக பங்கிடப்பட்டு மும்மூன்று நட்சத்திரங்கள் [9ⅹ3=27] என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மும்மூன்று நட்சத்திரங்களை அடுத்தடுத்த…